பிரபஞ்சப் பூச்செடியில், புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில், தெற்கு சூடான் இன்றுமுதல், சுதந்திரத் தனி நாடு, என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது;
ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவில், நடுநிசி கடந்து, கடிகாரத்தின் பெரிய முள் 12 ஐத் தாண்டி, ஒரு நிமிடம் ஆனபோது, தெற்கு சூடான், சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது; தலைநகர் ஜூபாவில், சுதந்திரக் கொடி பறக்கிறது; சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகிவிட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் எனும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து, தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகு ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடிக் கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், அக்கருப்பர் இனத்து சிறுவர் சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக் கொடியுடன் குதித்துக் கும்மாளம் இடுவதை, ஊடகத் திரைகளில் காணும்போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும், இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது. ............. read more
No comments:
Post a Comment