Translate

Sunday, 3 July 2011

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 
கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott  yp  ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை.

இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்தப்பிரேரணை 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு தொழில்க்கட்சியும் ஆதரவளிக்கிறது.

No comments:

Post a Comment