லண்டனில் முதல் முறையாக மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பிரித்தானியாவின் லண்டன் புறநகர் பகுதியான மில்ரன் கீன்ஸ் பகுதியில் நேற்று முந்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமாவீரர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுருவப் படத்திற்கான ஏகைச்சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் 23 மாவீரர் குடும்பங்களுக்கு நினைவுப் பொருட்கள் வழங்கப்பட்டு முதற்தடவையாக மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர் குடும்பங்களினதும், அவர்களது உறவினர்களதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்திந் தலைவியும் மூன்று மாவீரர்களின் தாயாருமான திருமதி. சண்முகசுந்தரம் அவர்களும், மேலும் பலர் உரைகள் இடம்பெற்றன.

No comments:
Post a Comment