Translate

Monday, 5 December 2011

டிசம்பர் 21-ல் முற்றுகைப் போராட்டம்: வைகோ


முல்லைப் பெரியாறை காக்கும் நோக்கத்துடன் டிசம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கேரள அரசும், வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளும் சேர்ந்து தயாரித்த அணை 999 என்ற திரைப்படம் முல்லைப்பெரியாறு அணைஉடைந்து ஏராளமான மக்கள் அதனால், உயிர்பலி ஆவதாக சித்தரித்து அணையை உடைப்பதற்கு கேரள மக்களை ஆயத்தப்படுத்த முற்பட்டதன் அடையாளமாகும்.
நமக்குத் தீங்கு செய்வதால் அவர்களுக்கும் தீங்குதான் விளையும்.  எனவே, கேரளம் நமது அணையை உடைக்க முற்படுவதை எப்படியும் தடுத்தே தீரவேண்டும். அணையை உடைப்பதால் அவர்களுக்கும் நேரப்போகும் கேடுகளை, அபாய அறிவிப்பாக நாம் எச்சரித்தாக வேண்டும்.
அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை, கடந்த 2010 மே 28 ஆம் நாள் நடத்தியதுபோல, வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றையப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன.
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக் காக்க இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.
URL simplifié: http://www.eelanadu.info/?p=1509

No comments:

Post a Comment