நம் வாழ்வில் நாம் பல தொடக்கங்களையும் முடிவுகளையும் சந்தித்திருக்கின்றோம். விதையின் முடிவு விருட்சத்தின் தொடக்கம். மலரின் முடிவு கனியின் தொடக்கம் கூட்டுப் புழுவின் முடிவு பட்டுப் பூச்சியின் தொடக்கம். ஊலகின் இயற்கை எமக்கு இந்தப் பாடத்தைக் கற்றுத்தரும்போது முள்ளிவாய்க்கால் முடிவு மட்டும் ஏன் தமிழீழத்தின் தொடக்கமாக இருக்கக்கூடாது ?


விதை விருட்சமாவதும் மலர் கனியாவதும் கூட்டுப்புழு பட்டுப்பூச்சியாவதும் அதனதன் இலட்சியத்திற்கான விடாமுயற்சியும் கண்துஞ்சா உழைப்புமாகும்.தமிழீழ மக்களின் இலட்சியம் என்ன? அவர்கள் உழைப்பு எங்கே?

எமது தேசியத் தலைவரினதும் வேங்கைகளினதும் போராட்ட வளர்ச்சியை ஆசீர்வாதமாகக் கொண்டும் எமக்கு ஏற்பட்ட வேதனைகள் வலிகள் தோல்விகள் சுமைகளைப் படிப்பினையாகவும் படிக்கற்களாகவும் ஏற்றுக்கொண்டு எமது தமிழீழ இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.எமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புதியஆண்டை வீணாக்காமல் விடுதலைக்காகச் செலவழிக்கச் சத்தியம் செய்வோம். அனைவர்க்கும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யேர்மன் திருமலைச்செல்வன்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.