Translate

Thursday, 19 January 2012

தோட்டத் தொழிலளர்கள் அனைவரையும் அன்று தொட்டு இன்றுவரை அடிமைப் படுத்தி வைத்திருப்பது யார் ?? சிங்களவனும் அவனுக்கு துணை போகும் ..........

தோட்டத் தொழிலளர்கள் அனைவரையும் அன்று தொட்டு இன்றுவரை அடிமைப் படுத்தி வைத்திருப்பது யார் ?? சிங்களவனும் அவனுக்கு துணை போகும் மலையக அரசியல் வாதிகளும் தானே.ஏற்கனவே அங்கிருந்து கலவரத்தால் துரத்தப் பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் குடியேறி யுத்தத்தால் பாதிக்கப் படும் வரை அங்கு சகல வசதியோடும் அடிமை நிலை நீங்கி எம் தேசிய தலைவரின் ஆட்சியில் குறைகள் எதும் அற்று வாழ்ந்தார்கள்.


சிலர் இன்னும் லயம் என்று சொல்லப் படும் தொடர் வீடுகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிங்களவனுக்கு அடிமையாக ஏன் அங்கு வாழ வேண்டும் உடனே தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிக்கு சென்று அங்கு தமக்கென ஒரு சொந்த நிலத்தில் குடியேற வேண்டியது தானே ?வளம் மிக்க வன்னிப் பிரதேசத்தில் இப்பொழுதும் நிறையவே நிலங்கள் தருசாக கிடக்கிறது. இதை விடுத்து ஏன் எங்களை தோட்டக் காட்டன் என்று சொல்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி தங்களை தாங்களே தாழ்வு படுத்துவது ஏற்புடையது அல்ல.

ஏன் யாழ்ப்பாணமக்களை பனங்கொட்டை சூப்பி என்று சொல்லவில்லையா ?வன்னி மக்களை காட்டான் என்று சொல்லவில்லையா எமது தமிழினத்தில் கேடு கெட்ட சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களின் பேச்சை தயவு செய்து யாரும் கணக்கெடுக்க வேண்டாம் நாம் அனைவரும் தமிழர்கள் எமக்குள் எந்தவிதமான பேதங்களும் கிடையாது எமது குறிக்கோள் தனித் தமிழீழம். எனவே உண்மையான தமிழ் உணர்வாளர்கள் யாரும் பேதம் பேசவேண்டாம் .தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

No comments:

Post a Comment