Translate

Tuesday, 7 February 2012

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர், பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள் உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக கெகலிய ரம்புக்வெல மெல்பேர்ண் சென்றிருந்தார். 
அங்கு அவர் தங்கியிருந்த விடுதியின் அறை பூட்டப்பட்டிருந்ததால் (?), ‘பல்கனி‘ வழியாக ஏறிக் குதித்து உள்ளே செல்ல முயன்றார். 


அப்போது தடுக்கி நிலத்தில் விழுந்த அவரது கால்கள் முறிந்துள்ளதுடன் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. 

இதையடுத்து மெல்பேர்ணில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தை ஊடகத்துறை அமைச்சின் செயலர் கணேகல உறுதிப்படுத்தியுள்ளார். 

முன்னர் கிடைத்த செய்தி 

விபத்தில் படுகாயமடைந்த கெகலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் 

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெகலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

எனினும் இந்த விபத்து எங்கே, எப்போது, எப்படி நிகழ்ந்த்து என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment