Translate

Monday, 6 February 2012

அற்புதமாக திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டான் தமிழன்.

புதிய தலைமுறை எனும் விஷச்செடியை நடுவீட்டில் நட்டு வளர்த்திருக்கிறோம் நாம். 
மத்திய காங்கிரஸ் மற்றும் இந்திய அரசின் தமிழரெதிர்ப்பை, தமிழரிடத்தில் ’நடுநிலை’ என்கிற குரலில் மிக நுணுக்கமாக வைக்கிறது.
“உண்மையை தேடி” என்கிற தமிழீழத்தமிழன் (புதியதலைமுறை அர்த்தத்தில்- இலங்கைத்தமிழர்) நிலையை அறிவதாக சொல்லி, எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியும் பேச முடியாத அளவிற்கு, “தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி” ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

 மிக நுணுக்கமாக இலங்கை அரசின் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தை தமிழரின் குரலில் நைச்சியமாக பேசி இருக்கிறது. இதை தமிழின உணர்வாளர்களும், களப்போராளிகளும், இயக்கங்களும் எதிர்க்க துணியவில்லையென்றால் முல்லைப்பெரியாறு- கூடன்குளம் போராட்டங்களில் அதை மட்டுப்படுத்த-அவதூறுக்குள்ளாக்க முயன்று அதில் புதியதலைமுறை-காங்கிரஸ் கூட்டணி வென்றதைப் போன்று 60 ஆண்டுகால தமிழீழ விடுதலையை வெறும் “ 


சிங்களவருக்கு இணையான சம உரிமை” போராட்டமாக மாற்றி வெற்றியும் அடைய முடியும். இந்த ஆவணப்படத்திற்கு எதிர்வினையை தமிழின உணர்வாளர்களே உடனே மேற்கொள்ளுங்கள்.... விஷச்செடியை வீழ்த்தாவிடில் வீடும் கொள்ளை போகும்.

No comments:

Post a Comment