மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான காலம் கனிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை சாத்தியப்படுத்துவதற்கு தாங்கள் முன்னெடுக்கவுள்ள மக்கள் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment