Translate

Tuesday, 21 February 2012

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகையை புறக்கணிப்பு


இலங்கைக்கு வரும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்இந்த வீழ்ச்சிக்கும் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் ரூமி ஜொபார் தெரிவித்துள்ளார். 


பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து போனதற்குஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையே காரணம் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதும்இந்தியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ஐந்து வகையான பழங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பப்பாளிமாம்பழம்அன்னாசிதிராட்சை மற்றும் தோடம்பழம் ஆகிய பழங்களின் இறக்குமதிக்கே கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. 

இலங்கையில் இந்தப் பழங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதாலேயேகிராமிய அளவில் இந்தப் பழங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக கட்டுப்பாடுகளை விதிக்கஇலங்கைஅரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

கடந்தஆண்டு நவம்பர் மாத்த்தில் மட்டும் 478,177 கிலோ திராட்சை, 2,144,067 கிலோ அப்பிள், 4,938,285 கிலோ தோடம்பழங்களை இறக்குமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment