Translate

Tuesday 21 February 2012

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க தயார்


குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க தயார்


வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக
 கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எந்தவொரு நபரேனும் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 
எவ்வாறெனினும்குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிச்சக்திகளின் விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு ரீதியான பொறிமுறையொன்றின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்  அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்மொழிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இலங்கையில் முடிவுறுத்தப்பட்ட போதிலும்சில நாடுகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்தும் சுதந்திரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளை குழப்புவதுடன் நின்று விடாதுநாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். சாட்சியங்களை திரட்டவும்விசாரணை நடாத்தவும் அரசாங்கம் பொறிமுறை ஒன்றை உருவாக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment