தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களாக செயல்பட்டமை மூலம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் தமிழ் கூட்டமைப்பினர் பங்காளிகளாக உள்ளனர் என்பது அரசின் வாதம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நால்வர் சிறையில் உள்ளார்கள் என்றும் இவர்கள் இது குறித்த இரகசியங்களை படையினருக்கு தெரிவித்து உள்ளார்கள் என்றும் தகவல்கள் கசிந்து உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் வாராந்தம் கிளிநொச்சிக்கு அழைத்து அரசியல் அறிவுறுத்தல்கள் வழங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனால் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும் தடுப்பில் உள்ள புலிப் புலனாய்வாளர்கள் மூலம் தெரிய வந்து உள்ளது.
புலிகளால் தமிழ் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் சம்பந்தமான விடயங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த பங்கர் ஒன்றுக்குள் இருந்து கிடைக்கப் பெற்ற புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலமும் வெளியில் தெரிய வந்து உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை படுகொலை செய்கின்றமைக்காக புலிகள் சக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உளவாளியாக பயன்படுத்தி இருக்கின்றனர் இதனால் அந்நாடாளுமன்ற உறுப்பினர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமையில் தமிழ் கூட்டமைப்பினருக்கு சம்பந்தம் உண்டு என்றும் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் அரசுக்கு தெரிவித்து இருக்கின்றார்.
இதே நேரம் புலிகளுடன் சேர்ந்து கூட்டமைப்பினர் செயல்பட்டமை தொடர்பாக மாநாட்டில் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்துவார் என்று பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்து உள்ளார்.
தமிழ் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனிவா மாநாட்டில் போர்க் குற்றம் சுமத்த அரசு திடசங்கற்பம்!
No comments:
Post a Comment