அன்பார்ந்த தமிழ் ஊடகவியலாளர்களே!, இணைய ஊடக நிர்வாகிகளே!
வணக்கம்.
வணக்கம்.
நாடு கடந்த தமிழீழ அரசினால் எதிர்வரும் 27.02.2012 திங்கள் அன்று ஜெனீவா ஐ.நா.முன்றலில் "நீதிக்காய் ஒன்றுபடுவோம்" என்னும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிகழ்வில் மக்களை கலந்து கொள்ளாமல் தடுக்கும் முயற்சியில் தீய சக்திகள் ஈடுபட்டுள்ளார்கள்.
ஐ. நா. முன்றலில் 27 ஆம் திகதியன்று நாடுகடந்த தமிழீழ அரசுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேறு எந்த நிகழ்வுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இன்று காலை ஜெனீவா காவல்துறையினருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க சுவிஸ் பிரதிநிதி தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியுள்ளதோடு இவ்விடயம் சார்ந்து ஊடக அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
ஐ. நா. முன்றலில் 27 ஆம் திகதியன்று நாடுகடந்த தமிழீழ அரசுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வேறு எந்த நிகழ்வுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இன்று காலை ஜெனீவா காவல்துறையினருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க சுவிஸ் பிரதிநிதி தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியுள்ளதோடு இவ்விடயம் சார்ந்து ஊடக அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
(இணைப்பு: http://naathamnews.com/?p=3518)
அத்துடன் ஜெனீவா ஐ.நா. முன்றலில் ஒரே நாளில் இரு ஆர்ப்பாட்டங்கள் நடாத்த எந்த சந்தர்ப்பத்திலும் காவல்த்துறையினரால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதையும் தெரிவிதுக்கொள்கிறோம்.
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது. உண்மைக்கு புறம்பானதும், 27 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவாவில் ஐ.நா. முன்றலில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்து கொள்ளவுள்ள மக்களை அச்சத்துக்குள்ளாக்கி அங்கு செல்லவிடாமல் தடுக்கும் நோக்குடன் விசமிகளால் பரப்பபட்ட செய்தி என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவருகின்றோம்.
இதேபோல் கடந்த 29.01.2012 திகதியும் "தமிழர்களின் பூவீகம்" என்ற சுலோகத்தை தாங்கிய
பதிவு இணையத்திலும் லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நடைபயணத்தை மட்டும் கொச்சைப்படுத்தும் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
(இணைப்பு: http://www.pathivu.com/news/19866/85//d,article_full.aspx)
அன்பார்ந்த தமிழ் ஊடகவியலாளர்களே!, இணைய ஊடக நிர்வாகிகளே!, மேற்குறிப்பிட்ட செய்தியினை உங்கள் ஊடகங்களில் பிரசுரித்திருந்தால் தயவு செய்து அதை உங்கள் ஊடகங்களிலிருந்து உடன் நீக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறான செய்திகளை உரியவகையில் உறுதிப்படுத்தாமல்
உங்கள் ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க ஆதரவுக்குழு
சுவிஸ்
No comments:
Post a Comment