Translate

Tuesday 7 February 2012

இந்தியாவின் துணையுடன் அமெரிக்காவை முறியடிப்போம் - சிறீலங்கா


ஜெனிவாவில் சிறீலங்கா அரசு தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளை இந்தியாவின் துணையுடன் முறியடிக்க முடியும் என்று சிறீலங்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 


அமெரிக்க அரசு எங்கள் மீது மிகக் கடும் அழுத்தங்களை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அதை சமாளித்து விடுவோம். ஏனெனில் இந்தியா எமக்கு முழுப் பக்க பலமாக இருக்கிறது இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.


எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிலாரி கொழும்புக்கு அறிவித்துள்ள நிலையில் அதிகாரியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பாக அந்த நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் 12 ஆம் திகதி சிறீலங்கா வருவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. இவருடன் பொதுமக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலாளர் மேரி ஒரேரோ உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் வரவுள்ளனர். 

No comments:

Post a Comment