Translate

Tuesday 21 February 2012

தொடங்கிவிட்டது மண்ணெண்ணெய் யுத்தம்


இன்று நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, தமிழ் தேசியப் பிரச்சினை போன்று மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க வக்கற்ற நிலையிலிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது தோன்றியுள்ள பொருளாதாரப் பிரச்சினையால் போக இடமில்லாது திண்டாடும் நிலையிலுள்ளனர்.

இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் தொடக்கம் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
பொறுமை இழந்த மக்கள் இன்று வீதிக்கு வந்துள்ளனர். ஜனாதிபதி கூறியவை யாவும் பொய்யென மக்கள் உணரத் தொடங்கியமையாலேயே நாட்டில் இவ்வளவு கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளது. யுத்தமே எல்லாவற்றுக்கும் காரணம், யுத்தத்தில் வெற்றி பெற்றால் சகல சௌபாக்கியங்களும் மக்களுக்கு கிடைக்கும் என்றே மஹிந்த ராஜபக்ஷ செல்லும் இடமெல்லாம் கூறிவந்தார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது எனவும் இவர்கள் கூறி வந்தனர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டாலே இந்த நாட்டுக்கு விடிவு கிட்டும் எனவும் இவர்கள் ஓங்கி ஒலித்தனர். மேற்படி வார்த்தைகளை நம்பிய தென்பகுதி மக்கள் குறிப்பாக தொழிலாளர்கள் பொறுமை காத்தனர். யுத்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவையும் வழங்கினர்.யுத்தம் முடிவடைந்து 2 1/2 வருடங்கள் கழிந்த நிலையில் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை.
இந்த நாட்டின் உண்மையான அபிவிருத்திக்கு எதுவும் செய்யாத மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேசக் கம்பனிகளின் நலன்களிற்காக பெருமெடுப்பிலான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. மேம்பாலங்களைக் கட்டினர். விமான நிலையங்களை உருவாக்க முயன்றனர், துறைகங்களை அபிவிருத்தி செய்ய முயன்றனர். அம்பாந் தோட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் களைக் கொட்டி புதிய துறைகம் ஒன்றை கட்டிடித்தனர். இவர்கள் எதிர்பார்த்தபடி கப்பல்கள் எதுவும் வராத நிலையில், ““இலவு காத்த கிளியின்'' கதையாக மாறியுள்ளது அம்பாந்தோட்டை துறைகம்.

எனவே பொருளாதார வளர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் போய்க் கொண்டிருக்கின்றது.மேலும் இவர்கள் எதிர்பார்த்தத முலீடுகளும் நாடடிற்குள் வரவில்லை. கடன்களைப் பெற்று காலத்தை ஓட்டியதால் இந்த அரசாங்கம் இன்று கடன் கொடுப்போருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. எனவே கடன் கொடுப்போர் நிபந்தனைகளை விதிக்கின்றனர். அவர்களின் நிபந்தனைகள் பழைய பல்லவிதான்.

“மக்களின் நலனோம்புச் செயற்பாடுகளுக்கான ஒதுக்கீட்டை நிறுத்து, நாணயப் பெறுமதியை இறக்கம் செய்,' “வேதன உயர்வை வழங்காதே,' “வட்டிகளை உயர்த்து,' “நுகர்வுப் பொருட்கள் சேவைகளுக்கான வரிகளை அதிகரி' என அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. குழந்தைகளை மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல் கடன் வழங்குவோர் தாம் விரும்பியவற்றை சாதிக்க இன்று கடன்களை வழங்குவதன் மூலம் முயல்கின்றனர்.இவை காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீளடியாத சகதிக்குள் சிக்குண்டுள்ளது.

மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தான் செய்த பாவங்களை கழுவிக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அழுத்தங்களும் வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சகல மட்டங்களிலும் இருந்து வலுப்பெற்று வந்துள்ளது.
பாவம் மஹிந்த ராஜபக்ஷவால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள எதனையும் ஒரு அங்குலத்திற் குக் கூட நகர்த்த முடியாத நிலையில் அவர் உள்ளார். பின்னிய வலைக்குள் அவரே சிக்குண்டுள்ளார். எரிமலையின் உச்சியில் குந்தி இருந்தவனின் கதையாக மஹிந்த ராஜ பக்ஷவின் கதை மாறியுள்ளது. எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. தற்போது மக்கள் மீது துப்பாக்கி ரவைகள் பாயும் நிலையை நோக்கி நிலைமைகள் மாறியுள்ளன.

இன்று மண்ணெண்ணெய் யுத்தம் தொடங் கியுள்ளது. 1953 இல் அரிசி யுத்தம் நடை பெற்றது. தற்போது எபொருட்களின் விலை ஏற்றத்தால் இதனை ““மண்ணெண் ணெய் யுத்தம்'' என அழைக்கமுடியும்.
மேற்படி போராட்டம் வடக்கு, தெற்கு, மலையகம் என பரவிவருகின்றது.எனவே இது சிறிய போராட்டமாக இல்லை.இது ஒரு தேசியப் போராட்டமாக மாறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதற்கெடுத்தாலும் வாக்குறுதிகளை வழங்குவதனையே செயற்பாடாகக் கொண்டிருந்தது.எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற டியும்.

இம்றை இந்தப் போராட்டம் மலையகத்திலேயே அதிக தாக்கத்தை செலுத்தும். மலையக மக்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர்களுக்கு காணி உரிமை இல்லை. பழைய இடிந்த லயன் காம்பறாக்களே அவர்களிடம் உண்டு.அதையும் உரிமை கொண்டாட கம்பனி நிர்வாகம் விடாது. எனவே மலையக மக்கள் மிகப் பெரிய அழுத்தங்களுக்குள் வாழ்கின்றனர்.
வாழ்க்கைச் செலவுச் சுமையால் விரக்தியின் எல்லைவரை சென்றிருக்கும் மலையக மக்கள் சரணாகதி அடைந்திருக்கும் மலையகத் தலைமைகளின் கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்துகொண்டு நிச்சயம் போராட்டத்தில் குதிப்பார்கள். இன்றைய நிலையில் மக்களுக்கு சமாதானம் கூற ஆட்சியாளர்களால் முடியாது. நடைபெற இருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விளக்கம் அளிப்பகள் தொடர்பாக விளக்கம் அளிப்பதோடு, நாடே பற்றி எரிகின்றது என்பது பற்றியும் விளக்கம் கொடுக்க வேண்டி நேரிடும்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் போராட்டங்கள் மலிந்து காணப்படுகின்றன.தமிழ் மக்கள் மீது நீட்டப்பட்ட துப்பாக்கிகள் இன்று தென்னிலங்கை மக்கள் மீது நீட்டப் படுகின்றது. அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கும் இடதுசாக் கட்சிகளின் அங்கத்தவர்கள் எம்மிடம் வந்து சேர்கின்றனர்.
முக்கியமாக தொழிற்சங்க மட்டங்களில் முக்கிய தலைவர்கள் போராட்டங்களில் குதிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.இன்றைய சந்தர்ப்பத்தில் மிகப் பலவீனமான நிலையிருக்கும் பேரினவாத சக்திகளை இந்த நாட்டின் அரசியல் வட்டத்திலிருந்து துரத்துவதற்கு இதைவிட வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கப் போவதில்லை. சகலரும் இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைவதன் ஊடாக ஒரு மாற்றத்தை காணடியும்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

No comments:

Post a Comment