Translate

Sunday, 25 March 2012

சிங்களவருக்கு இணையான சலுகை இலங்கை தமிழருக்கும் வழங்கப்படும் : இந்திய மத்திய அமைச்சர் வாசன் _


  சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும் ௭ன இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதியளித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது, இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயற்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள் ளது.
முள் வேலியில் அடைப்பட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது. சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகிறார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கும் விரைவில் கிடைக்கும்.

மத்திய அரசு வெளியுறத்துறை அமைச்சகமும் அமைச்சர் கிருஷ்ணாவும் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களை பிரச்சினையை மத்திய அரசு சிறந்த முறையில் அணுகி வருகின்றது என்றார்.
 ___

No comments:

Post a Comment