இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்; தமிழக காங்கிரஸ்
ஜெனிவா மனித உரிமைச் சபையில் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா அரசாங்கம் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இருந்ததாக ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கை தந்திருக்கிறது. இலங்கையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது என்று அறிந்த பிறகு மனிதர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் தருகிற இந்தியத் திருநாடு குரல் கொடுத்தாக வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு அன்னை இந்திராகாந்தி காலத்திலிருந்து இன்றுவரை உதவிக்கரம் நீட்டியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நினைவு கூற ஆசைப்படுகிறேன்.
இந்த போருக்குப் பின்னும் கூட தமிழர் பகுதிகளில் புகையிரதப் பாதைகள் அமைப்பது, வீடுகள் கட்டித்தருவது, யாழ்ப்பாணம் பகுதியில் தூதரகம் திறந்தது, கல்விக் கூடங்களை சீரமைத்து விவசாயத்திற்கு டிராக்டர்கள் வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இன்னும் உதவி செய்து கொண்டிருப்பதும் மத்திய அரசுதான்
கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வற்புறுத்தியிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் என்பதில் நம்பிக்கை உள்ளதாகவும் என அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment