Translate

Friday 30 March 2012

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்- நா.க.த.அ.


தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் ஒஸ்ரேலியாவின் பழங்குடி மக்களுக்கான,  நாடாளுமன்ற உறுப்பினர் ஹென் வைட் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது வலியுறுத்தியுள்ளார்.


சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை, தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை, அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஆகிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டுமென, மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஆட்சியாளர்களினால், ஈழத்தமிழினத்தின் மீது நடத்தப்பட்டு வரும் இனவழிப்பு தொடர்பிலான ஆவணங்களை முன்னிறுத்தி, தமிழீழ மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை விளக்கிய துணை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, தமிழர்களின் நிலைப்பாட்டினை  தெரியப்படுத்தினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டினை கரிசனையோடு கவனத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹென் பிற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment