Translate

Monday, 30 April 2012

யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க


யாழ்ப்பாணம் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்று நெடுந்தீவுக்கு சென்றிருந்தனர்.இதன்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கேட்டபோது...

01. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கட்சி ஒன்று நெடுந்தீவைத் தனது கோட்டையாக வைத்துக்கொண்டு மக்களை அடிமை போல நடத்தி வருகிறது. இங்கு ஜனநாயகம் என்பது துளியளவும் இல்லை. குறித்த கட்சியின் உத்தரவுகளை மீறுபவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். 

 02. இதனால் நெடுந்தீவில் மக்கள் பீதியுடனேயே வாழ்கின்றார்கள். ஜனநாயகச் செயற்பாடுகளுக்காக இங்கு மாற்று அரசியல் கட்சிகள் வருவதைக் கூட அவர்கள் தடை செய்துள்ளனர். அதையும் மீறி வரும் கட்சிகள் மீது கடும் அழுத்தங்களை அவர்கள் மேற்கொள்வார்கள். 

03. இன்று எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் பயணிப்பதற்குக் கூட எவரும் வாகனங்களை கொடுக்கக் கூடாது என்று எம்மில் பலர் மிரட்டப்பட்டனர். இவ்வாறு அவர்களின் சொற்படி தலையாட்டும் மந்தைகளாகவே எம்மை நடத்துகிறார்கள். இல்லாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

 04. இப்போது இந்த உண்மைகளை உங்களிடம் தெரிவித்ததால் சில வேளைகளில் வெள்ளை வானிலோ அல்லது வெள்ளைப் படகிலோ நாங்கள் கடத்தப்படும் நிலையும் ஏற்படலாம் என்றனர்.

No comments:

Post a Comment