Translate

Monday 16 April 2012

உருத்திரகுமாரனின் கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அரபு செய்திநிறுவனம்!


பலஸ்தீன அதிபர் முஹம்மது  அப்பாஸ் அப்பாஸ் அவர்கள் உத்தியோகபூர்வ இரண்டு நாள் பயணமாக  சிறிலங்காவுக்கு சென்றுள்ளார்.
சிறிலங்காவின் அலரி மாளிகையில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கவுக்கும், பலஸ்தீன அதிபர் முஹம்மது  அப்பாஸ் அவர்களுக்கும் இடை:யில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து இருதரப்புக்கு இடையிலாக இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  இவ்வொப்பந்தங்களில் ஒன்று பலஸ்தீனம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன் அரசியல் ஆலோசனை தொடர்பிலான ஒப்பந்தமாக அமைந்துள்ளதென செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பலஸ்தீன அதிபரின் சிறிலங்கா பயணம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை பலஸ்தீனத்தின் செய்தி நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
இக்கடித்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நீங்கள் கைகுலுக்கும் போது, ஒரு போர்க்குற்றவாளியு டன் தான் கைகுலுக்குகின்றீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்பு கின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீங்கள் ஒரு நாட்டின் தலைவராக, உங்களுக்குள்ள சுதந்திரத்தைப்  பயன்படுத்தி, சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றியும்,  தமிழ்ப் பிரதேசங்களில் இடம் பெரும் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றியும் நீங்கள், ஒரு நாட்டின் தலைவராக உங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி , உங்கள் கருத்துக்களை கூறல் வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடித்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பலஸ்தீனத்தின் செய்திநிறுவனம் இக்கடித்தினை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment