Translate

Sunday 15 April 2012

ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்ப்பது தற்கொலைக்கு ஒப்பானது! -இரா.துரைரத்தினம்.


திரு. துரைரத்தினம்
வணக்கம். அய்க்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மே நாள் கொண்டாடினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது கொஞ்சம் மிகை.
அரசியலில் தீண்டாமை பார்ப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல. 

இப்படித்தான் ஜெனிவாவில் நடந்த அய்.நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ததேகூ  போவதில்லை என்று முடிவெடுத்த போது ததேகூ தமிழ்மக்களுக்குத் துரோகம் செய்கிறது
என வாயிலும் வயிற்றிலும் சில மேதாவிகள் அடித்துக் கொண்டார்கள். வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தார்கள். 
 அதே கூட்டந்தான் அய்கிய தேசியக் கட்சியோடு ததேகூ
சேருவதால் அது கற்பை இழந்து விட்டதே என முகாரி பாடுகிறது.
அதற்கு முன்னர் ஆட்சித்தலைவர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்க ததேகூ  முடிவு எடுத்தபோது தமிழினக் கொலைகாரனுக்கு ஆதரவா என்று சிலர்
ஊழை இட்டார்கள்.
  அந்த இராசதந்திர அசைவின் மூலமே மகிந்த இராசபக்சேக்கு வட  கிழக்கு வாழ் தமிழ்மக்களது
ஆதரவு இல்லை என பன்னாட்டு சமூகத்துக்குத் தெரிவித்தோம். இதனை நேற்றுக்கூட சந்திரிகா குமாரதுங்ககா ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சுட்டிக் காட்டினார். 
 
தென்னிலங்கையில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.
எனவே அரசியல் தீர்வை எட்ட இந்த இரண்டில் ஒரு கட்சியோடுதான்  பேச வேண்டும்.
அதனால்தான் வி.புலிகள் 2002 ஆம் ஆண்டு இரணில் விக்கிரமசிங்காவோடு அமைதி உடன்படிக்கை எழுதிக் கொண்டார்கள். அப்போது அவர்கள்
பழைய குப்பையை கிளறிக் பார்க்க வில்லை. யதார்த்தத்தோடு நடந்து கொண்டார்கள்.
வரலாற்றில்  தமிழர்களுக்கு யார் யார் துரோகம் செய்தார்கள் எனக் குப்பையைக் கிளறுனால் அதில் முதலில் அகப்படுபவர் திருவாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆவர்.
அவர்தான் மலைநாட்டுத் தமிழர்களது குடியுரிமைவாக்குரிமைக்கு வாதாடுவேன் என எழுத்தில் கொடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு ஒரு மீன்பிடி அமைச்சர்
பதவிக்கா பத்து இலட்சம் மலையகத் தமிழர்களை சிங்களவரான டி.எஸ். சேனநாயக்காவுக்குக் காட்டிக் கொடுத்தார். 
 இதனால் நாடாளுமன்றத்தில் தமிழர் பலம் சரிபாதியாகக் 
குறைந்தது. 1947 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இருக்கைகளை கைப்பற்றிய இலங்கை - இந்திய காங்கிரஸ் 1952 இல் நடந்த தேர்தலில் ஒரு இருக்கையில் கூட வெல்ல முடியவில்லை.
தமிழர்களது வாக்குப் பலம் குறைந்ததே 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு சட்டமாகியது.
அய்க்கிய தேசியக் கட்சியோடு  மே நாளைக் கொண்டாடுவதால் சிங்கள மக்களில் ஒரு  பகுதியினரது ஆதரவாவது எங்களுக்குக் கிடைக்கும்.
ததேகூ க்கும் அரசுக்கும் இடையில் எட்டப்படும் அரசியல் தீர்வை அய்தேக ஆதரிக்கும் என இரணில் சொல்லுகிறார். இது பெரிய மன மாற்றம்.
இதனால் அவரது  கட்சிக்குள்ளேயே அவருக்கு  எதிர்ப்பு எழுந்துள்ளது.   ததேகூ ஓடு கூட்டு வைத்தால் அய்தேக சிங்கள  பவுத்த மக்களது வாக்குகளை அவர்களது
ஆதரவை இழந்துவிடும் என சதீஷ் பிரேமதாசா
கரு ஜெயசூரியா போன்ற கடும்போக்காளர்கள் 
 சொல்கிறார்கள். சொல்வதோடு நில்லாமல்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மே நாள் விழாவையும் புறக்கணிக்கப் போவதாகவும் 
 சொல்கிறார்கள். 
ததேகூ நான்தான் தோற்றுவித்தேன் எனத் திரு துரைரத்தினம் எத்தனை நாளைக்குச் சொல்லிக் கொண்டு இருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால்
அப்படி அவர் சொல்வது வீடுகட்டின கொத்தனாருக்குத்தான் வீடு சொந்தம் என்று சொன்னவன் கதை போன்றது. திரு சம்பந்தனை விட
,திரு மாவை சேனாதிராசாவை விட
தனக்குத்தான் அரசியல் தெரியும்
,
  தான் அரசியலில் ஒரு சாணக்கியன் என திரு துரைரத்தினம் சொல்வது அல்லது நினைப்பது நகைப்புக்கு உரியது.  
ததேகூ ஒரு முடிவை மேல்மட்டத்தில் எடுக்கிறதா கீழ் மட்டத்தில் எடுக்கிறதா அல்லது இடைநிலை மட்டத்தில் எடுக்கிறதா என்பதை
ததேகூ இடம் விட்டு விடுவோம்.
  எல்லாவற்றையும் தாயக மக்களிடம் விட்டு விடுவோம்.  அவர்களிடம் தான் வாக்கு இருக்கிறது. அவர்கள்தான் ததேகூ வாக்களித்து
நாடாளுமன்றம் அனுப்பினார்கள்.
சுவிசில் இருந்து கொண்டு Remote Control  அரசியல் நடத்த எத்தனிப்பது  சரிப்பட்டு வராது.

நக்கீரன்

No comments:

Post a Comment