Translate

Sunday, 15 April 2012

மகிந்தா அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலைமை வழக்கு -அச்சத்தில் மகிந்தா !


சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுள் ஊடாக சிறிலங்காவினை அதன் போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழக சட்டவியல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றிப் பேசிய தலைமை வழக்கு தொடுனர் ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்படியில் குற்றங்களை, தான் விசாரித்து தீர்ப்பளிக்குமென்றும், அது இயலாதபட்சத்தில், பரந்துபட்ட சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி, குற்றம் புரிவோரை பொறுப்பு கூறவைப்பதுண்டு என்றும், அதனடிப்படையில் சிறிலங்காவினை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தீர்ப்புகளின் கீழ் கொண்டுவர முடியுமென்று தெரிவித்தார்.
சர்வேசே குற்றவியல் நீதி மன்ற ரோம் உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பமிடாத நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் சேவை, அதன் அங்கத்தவ நாடுகளுக்கு மட்டுமாகும் என தெரிவித்தார்
ஆனாலும் ஐ.நா பாதுகாப்பு சபையால் கையளிக்கப்படும் விசாரணைகளையும், அங்கத்துவமில்லாத நாடுகள் தமக்கு இயலாமல் போய்விட்ட வழக்குகளை கையளிக்கும் போதும், சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து தீர்ப்பளிப்பதுண்டு என எடுத்துரைத்துள்ளார்.
சிறிலங்காவினை பொறுத்தளவில் இவையாவும் கைகூடாத நிலையில், சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுதான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சிறிலங்காவின் போர்குற்ற விவகாரத்தில் தலையிட வைக்க முடியுமென்று தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர் கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்களோடு கலந்துரையாடியதோடு தமிழர்கள் தொடார்பிலான களஆய்வுக் கையேடு ஒன்றினையும் அவருக்கு கையளித்தார்.
இக்கையேட்டினை பிரதமரின் ஆலோசகர் தெய்வேந்திரன் கந்தையா அவர்கள் இக்கருத்தரங்கிற்கென சிறப்பாக உருவாக்கியிருந்தார்.
இதேவேளை இக்கருத்தரங்கில் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் சிலரும் பங்கெடுத்திருந்தனர்.
நாதம் ஊடகசேவை

No comments:

Post a Comment