Translate

Sunday 15 April 2012

பெருமை பிடித்த யாழ்ப்பாணத்து தமிழர்கள் (சிறப்புக் கட்டுரை )

எமது மண்ணில் நடந்து முடிந்த போரின் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சில செயல்கள் பண்பாடுகள் என்கிற பெயர்களில் ஊக்குவிக்க பட்டு தமிழ்மக்கள் மத்தியில் புகுத்தப்படுகிறது.



குறிப்பாக இப்படியான நடவடிக்கைகள் வலுப்பெறுவதற்கான முக்கிய காரணம் அங்கு இருக்கும் இளைஞர்கள் ,யுவதிகள் மத்தியில் மிகத் தெளிவான பார்வை இல்லாதது என்பதே கவலையளிக்கும் செய்தி . எமது மண்ணில் மூன்று தசாப்த காலமாக நடந்த போரினால் மத பேதமும் சாதி பேதமும் பெருமளவில் இல்லாமல் போய்விட்டது .இதற்காக போருக்கு நன்றி சொல்லலாம் எனத் தோன்றுகிறது.



யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் மத ரீதியிலான பாகுபாடுகளும் சாதி ரீதியிலான வேற்றுமை உணர்வுகளும் இன்று வரையும் அவர்கள் வாழ்வியல் சூழலில் மேலாதிக்கத்தின் அடம்பிடிப்பாக அங்குள்ள மக்கள் தலைமுறை தலைமுறையாக வளர்த்து கொண்டுவருவதே யாழ்பாணத் தமிழர்களின் ஒற்றுமையின்மையின் காரணமாக இருக்கிறது .யாழ்ப்பாணத் தமிழர்களை பற்றி அண்மையில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பரபரப்பான செய்தியை வெளியிட்டது .
பரந்த விரிந்த சமுதாய நோக்கின்படி வட மாகாண தமிழர்களுக்கும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றது.பொதுவாக இந்து உயர் சாதியைச் சேர்ந்த வட மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள், நகரவாசிகள். கிழக்கு மாகாண தமிழர்கள் பொதுவாக வறியவர்கள், கிராமவாசிகள்.


இலங்கையில் யாழ்ப்பாணம்தான் தமிழர்களின் கலாசார அடையாளத்தின் மையமாக விளங்குகின்றது என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர். பெருமை பிடித்தவர்கள்.கல்வியில் உயர்ந்தவர்கள் என்று சுயம் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஏராளமான பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. அமெரிக்க சபைகளினால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இங்கு உள்ளன.கல்வித் தகைமைகள் காரணமாக பிரித்தானியர் ஆட்சியிலும் வட மாகாண தமிழர்கள் பயன் பெற்றனர். குறிப்பாக எழுதுவினைஞர் பதவி உட்பட பல பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர். வட மாகாண தமிழர்கள் என்கிறபோது இந்து வெள்ளாளர்களை குறிக்கின்றோம்.

யாழ்ப்பாண தமிழர்களில் பலர் கொழும்பில் மிகவும் வசதியாக உள்ளனர், வர்த்தகம் செய்கின்றார்கள். வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் வசிக்கின்ற இலங்கைத் தமிழர்களில் அநேகர் யாழ்ப்பாணத்தார்.இலங்கையில் 23 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்றால் 18 சதவீதமானவர்கள் இலங்கைத் தமிழர், 05 வீதமானவர்கள் மலையகத் தமிழர். இலங்கைத் தமிழரில் மூன்றில் இரண்டு பங்கினர் யாழ்ப்பாணத்தார்.
வட மாகாண தமிழர்களில் அநேகர் அகம்பாவமும், தற்பெருமையும் பிடித்தவர்கள் என்பதை வட மாகாணத்தார் இயல்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.யாழ்ப்பாணத்தார் எங்குல்லாம் போகின்றனரோ அங்கு சொத்துக்களை வாங்கி குட்டிப் பிரபுக்கள் போல் வாழ்கின்றனர், இவர்களின் தலைக் கனத்தை விளங்கிக் கொள்ள முடிகின்றது என யாழ்ப்பாண கத்தோலிக்க பாதிரியார் நிக்கொலஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை நோக்கும் போதே ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்வது ஒரு சமூகத்துக்கு சார்பானதும் இன்னொரு சமூகத்தை முன் நோக்கி செல்லவிடாத கருத்தாகவே தெரிகிறது .
ஆளப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு வட மாகாண தமிழர்களுக்கு உள்ளது, இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கட்டாயம் தலைமை தாங்கி நடத்த வேண்டியவர்கள் என்கிற உணர்வை பிறப்புரிமையாக கொண்டு இருக்கின்றனர் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறுவது யாழ்ப்பாணத் தமிழரின் ஆணவசிந்தனையிலிருந்து தோன்றிய கருத்தாகவே பார்க்க வேண்டும் .அதிகம் பெருமை பேசும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப் படுத்துவது போலவே இருக்கிறது .

கத்தோலிக்க பாதிரியார் நிக்கொலஸ் கூறியது மிகச் சரியான கருத்தாகவே எல்லோருக்கும் படுகிறது .யாழ்ப்பாணத் தமிழர்கள் குட்டி பிரபுகள் என்ற சிந்தனையிலே தான் தங்களுடைய வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர் .குறிப்பாக மத ரீதியிலான பேதங்களும் சாதி ரீதியிலான பேதங்களும் யாழ்ப்பாணத்தில் தான் இப்போதும் நிலவி வரும் பிற்போக்கான நடத்தைகளில் மாற்றபடவேண்டிய மிகப் பெரியதேவை இளம் தலைமுறையின் கடமையாக உள்ளது .

சாதி ஒழிப்புகளும்,பேத உணர்வுகளும் யாழ்பாணத்தில் இல்லாமல் போகவேண்டும் . இப்போதும் கூட யாழ்பாணத்தில் திருமணம் ஆகும்போது சீதனம் கேட்கும் கொடிய பண்பாடு அல்லது பெண் அடிமை சிந்தனை யாழ்பாணத்தில் படித்த சமுதாயம் என பெருமை பேசும் மாந்தர் மத்தியில் நிலவுவதை திருமணம்  செய்ய போகிற இளைஞர்கள் மாற்றவேண்டும் . யாழ்ப்பாணத் தமிழர்கள் எப்போது சாதி ரீதியிலான ,மத ரீதியிலான பேதமைகளை விட்டெறிந்து முற்போக்கு சிந்தனையான ஒரு சமூகத்தை கட்டி எழுப்புகிறதோ அப்போது தான் எல்லோரும் ஒரே நிலையில் வாழமுடியும்,எல்லோருக்கும் விடியல் கிடைக்கும்.

இந்த கட்டுரை தொடர்பான உங்களுடைய கருத்துக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.   
puthueluthu123@gmail.com

No comments:

Post a Comment