யாழ்.குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. தீவகத்தில் வாழும் மக்கள் தமது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்ய யாழ்.குடாநாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர். தீவையும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருந்த குறிகட்டுவானையும் பிரித்திருந்த 9 மைல் கடலாக இருந்தபடியால் தீவுக்கான அனைத்துத் தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே இடம்பெற்றன.
பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணை பிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இன்று படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது இப்படகு.
1985 மே 15 காலை 7 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு அரைமணி நேர பயணத்தின் பின் இரு பிளாஸ்ரிக் படகுகளில் முக்கோண கூர்க்கத்திகள், கண்டங் கோடரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் ஆயுதம் தாங்கி வந்த சீருடை தரித்தவர்களால் வழிமறிக்கப்பட்டது. இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு.
ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக(?) நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது

No comments:
Post a Comment