Translate

Tuesday, 15 May 2012

இலங்கை விவகாரம் குறித்து லண்டனில் நாளை விவாதம்: ரஜீவ விஜேசிங்க எம்.பி.யும் பங்கேற்பார் _


  ""இலங்கையின் கொலைக்களங்களின் பாதிப்பும் நாட்டின் இன்றைய நிலையும்'' என்ற தலைப்பிலான விவாதம் பிரித்தானியாவில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான "ப்ரொன்ட்லைன் கிளப்' இந்த விவாத நிகழ்வை எதிர்வரும் 16 ஆம்திகதி மாலை 7 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.



80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் இலங்கையில் மரணமாக காரணமாக அமைந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க் குற்றங்கள் தொடர்பான கேள்விகளும் அதற்கு எவ்வாறு பதிலளிக்கவுள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக புரொன்ட்லைன் கிளப் தெரிவித்துள்ளது.

""இலங்கையின் öகாலைக்களங்கள்'' ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும் பொது மக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் ஏனைய கொடூரங்களையும் இது வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாகவும் "புரொன்ட்லைன் கிளப்' குறிப்பிட்டுள்ளது.

பிபிசியில் ஹாட்ரோக் நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்குவார்.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின விவகார ஆய்வாளளர் யோலன்ட் போஸ்டர், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் ராஜீவ விஜேசங்க ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இலங்கை தூதுவர் கிறிஸ் நொனிசும் ஒரு பேச்சாளராக பங்கேற்பார் என்று புரொன்ட் லைன் கிளப்' பின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண்தம்பிமுத்து பங்கேற்பார் என்று தெரியவருகிறது.

இந்த நிகழ்வுக்கான ஆசனப்பதிவுகள் முடிவடைந்து விட்டதாகவும் இதனைப் பார்க்க விரும்புவோர் http://www.ustream.tv/ frontlineclub என்ற இணையத்தளம் மூலம் நேரலையாகப் பார்க்லாம் என்றும் புரொன்ட்லைன் கிளப்' அறிவித்துள்ளது. _

No comments:

Post a Comment