Translate

Wednesday, 2 May 2012

Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் !


தமிழர்கள் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.
தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சி ஆவணப்பட விருத்துக்கான போட்டிக்களத்தில் நான்கு ஆவணப்படங்கள் பார்வையாளர்களின் வாக்களிப்புக்கு இணையத்தளத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் உட்படBahrain: Shouting in the Dark (Al Jazeera), The Truth About Adoption – Panorama (BBC1), 
ஆகிய ஆவணப்படங்கள் போட்டிக்களத்தில் உள்ளது.
இதில் Bahrain: Shouting in the Dark/ Sri Lanka’s Killing Fields (Channel 4) ஆகிய இரு ஆவணப்படங்கள் இதுவரை 100 000 பார்வையாளர்களது வாக்களிப்பினை பெற்றுள்ளதாக இணையத்தளச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களது தேர்வினை இட்டுக்கொள்ளhttp://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields  குறித்த இந்த இணையத்தளத்திற்கு செல்லவேண்டும்.

No comments:

Post a Comment