கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.திருகோணமலையில் ஈபிடிபி கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இந்நடவடிக்கைள் ஆரம்பமாகின.
புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, இராணுவத்தினர் தேடுதல்களை மேற்கொண்டனர். இத் தேடுதல் நடவடிக்கையின் போது பல தமிழ் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரக்ள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment