தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சிஹல உறுமய உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த பதின்நான்கு அமைப்புக்கள் இன்று கலந்து கொண்டன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில், குருநகர் சென். றோக்ஸ் மைதானத்தில் ஆரம்பாகியது.
இன்று கலந்து கொண்டன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில், குருநகர் சென். றோக்ஸ் மைதானத்தில் ஆரம்பாகியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதக் கட்சிகளை ஆதரித்து ஜனாதிபதித் தேர்தலிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதற்காக கடந்த ஒரு வருடமாக அரசுடன் பேச்சு நடத்தினோம். ஆனால் அது பயனளிக்கவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும் என்று சம்பந்தன் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளன. அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும்.
No comments:
Post a Comment