
இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்தியகொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும்03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில்பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்சபிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம்உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும்ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
இதன் முதற் கட்டமாக மகிந்தவின் லண்டன் விஜயத்தை தடுத்து நிறுத்தக்கோரும்தபால் அட்டைகளை பிரித்தானிய மகாராணிக்கு அனுப்பும் போராட்டத்தினை இன்றுகாலை முதல் முன்னெடுத்துள்ளனர். இதனை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள்செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி மகிந்த லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள்அணிதிரண்டு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில்உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தபுலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடன் சென்றிருந்த, அவரது பாதுகாப்புப் பிரிவு கட்டளைஅதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர்க்குற்ற வழக்கும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை ஜனாதிபதியின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் நீக்கம்செய்திருந்தது.
அத்தோடு பிரித்தானியாவில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் விமானநிலையத்திலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பாகவும் திடீரெனநடாத்திய முற்றுகைப் போராட்டத்தால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச மாற்றுவழியூடாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
அதனையும் எப்படியோ அறிந்த தமிழ் மக்கள் அங்கும் சென்று முற்றுகைப் போராட்டம்நடாத்தியதால் அச்சமடைந்த மகிந்த ராஜபக்ச நிலைமைகள் சிக்கலடைந்ததால்உடனடியாகவே பிரித்தானிய காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்போடுவெளியேறி அன்று இரவே கொழும்பு சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment