Translate

Sunday, 20 May 2012

யாழ் பல்கலைக் கழகத்தைச் சுற்றி ஆயுதம் தரித்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில்


  யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த பொலிஸார் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் யாழ். பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களின் மாணவ மாணவிகள் பெரும் பதட்டத்தின் மத்தியிலேயே தங்களுடைய கற்றல் செயற் பாட்டினை மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 



கடந்த வெள்ளிக் கிழமை யாழ். பல்கலைக் கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் இனம் தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னி போரின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இதனைத் தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த மாணவன் தாக்கப்பட்டதாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவன் தாக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் துணை வேந்தரின் காரியாலயம் உட்பட பல்கலைக் கழகத்தின் பல பெறுமதியான உடைமைகளையும் அடித்து நொறுக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment