Translate

Sunday, 20 May 2012

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபெறும் சூழ்நிலை இல்லை:மனோ கணேசன் _


  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி கருதவில்லை என்று அதன் தலைவர் மனோ கணேசன் நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். 


எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இக் கூட்டத்தில் விலைவாசி வானளாவ உயர்ந்துள்ளமை குறித்து எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படும்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயவென ஜனாதிபதி நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பங்கு கொள்ளச் செய்ய வேண்டுமென்ற அரசின் நிலைப்பாட்டுக்கு ஐ.தே.கட்சி துணை போகக் கூடாது. அதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment