Translate

Tuesday, 1 May 2012

திருஞானசம்பந்தரின் சக்திகள் நித்தியானந்தாவிடம் உண்டு புதிய ஆதீன நியமனம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது மதுரை ஆதீனம் அறிவிப்பு; ஆடம்பரமாக நடந்த பதவி பொறுப்பேற்பு விழா

nithiyananda_swamy_innoguration_மதுரை : மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் 293 ஆவது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்தியானந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். அவர் இனி மேல் “ மதுரை ஆதீனம் 293 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்.

பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு குளுகுளு வசதியுடன் கிரனைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.
மதுரை ஆதீனம் பிரமுகர்களைச்  சந்திக்கும் அறை குளு குளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு இந்த மண்டபத்தில் நித்தியானந்தர் பதவியேற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக  பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும் நித்தியானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில்  அமர்ந்தனர். முறைப்படி நித்தியானந்தாவை 293 ஆவது மதுரை  ஆதீனமாக நியமிப்பதாகவும் இனி அவர் மதுரை ஆதீனம் 293 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக அவரது கழுத்தில் ஆதீன கர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்.
அத்துடன் புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்தியானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.  இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்தியானந்தர் சில நாட்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின் பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆசிரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்தியானந்தாவின் போர்க்குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது.
எனக்குப் பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சினை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்களை நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணர்கிறேன். உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில்  இனி நானும் அவரும் தந்தை மகன் போல இணைந்து செயற்படுவோம்.

No comments:

Post a Comment