Translate

Tuesday 1 May 2012

லண்டன் மே தினப் பேரணியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பரப்புரை.


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லண்டன் மாநகரில் நேற்று (01) பல்லின மக்கள் கலந்து கொண்ட மே தினப் பேரணியில் பிரித்தானியதமிழர் பேரவை கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை எடுத்துக் காட்டியது.

சாதகமற்ற மழையுடன் கூடிய கால நிலை மற்றும் வேலை நாளாக இருந்தும் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் இப் பேரணியில் கலந்து கொண்டு, ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் மடிக் கணணி(lap- top) மற்றும் smart phone என்பவற்றை பாவித்து பல்லின மக்களின் மத்தியில் இணையத் தள மின் மனுவிற்கான கையெழுத்துப் பெறும் வேட்டையில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையினை முன் வைத்து கவனத்தை சிதறவிடாது தொடர்சியாக பிரித்தானிய தமிழர் பேரவை. முன்னெடுத்துவரும் பல்வேறு செயற்பாடுகளில் இன்றைய நிகழ்வும் பல்லின மக்களின் கவனத்தை ஈற்கும் வகையில் அமைந்தது.
மேடையில் உரையாற்றிய பேச்சாளர்கள் பலரும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் குறிப்பிட்டார்கள்.
பல்வேறு உள்ளூர் தமிழர் பேரவைகளின் பங்களிப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இணையத்தள மின் மனுவிற்கான கையெழுத்துப் பெறும் பரப்புரையும் அங்கு எடுத்துச் செல்லப்பட்ட பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் என்பன இம் மே தினத்தைப் பார்வையிட்டு செய்தி சேகரிக்க வந்த சர்வதேச ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர்கள் எமது உறுப்பினர்களை அணுகி விபரம் சேகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளில் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment