Translate

Tuesday 1 May 2012

யாழ் மே தின ஊர்வலத்தில் புனலாய்வு பிரிவினரால் புலிக்கொடி கொண்டுவரப்பட்டது.(காணொளி)


(இரண்டாம் இணைப்பு ) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின்   மேதின ஊர்வலத்தில் தழிழீழ  புலிக்கொடியுடன் சிலர் கலந்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.  
ஐதேக தலைமையிலான எதிரணியினரின் மேதின ஊர்வலம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமானது.

அதில் சிவப்பு மஞ்சல் கொடிகளுடன் கூட்டமைப்ன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்  பிரேமச்சந்திரன் தலைமையில் சிலர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டவர்கள் , அவர்களுக்கு இடையில்  சிலர் தமிழீழ படம் பொறித்த பெனியன்களை  அணிந்திருந்ததுடன், ஒருவர் புலிக்கொடியையும் கொண்டுவந்ததைக் காணமுடிந்தது. இவர்கள் காணொளிக்கு துக்கி  புலிக்கொடியை துணிச்சலாக காட்டிவண்ணம்  வருகிறது சந்தேகங்களை எழுப்புகிறது . நாம் யாழில் தொடர்பு கொண்டு சிலரை கேட்ட பொழுது. இவர்கள் சிங்கள புனலாய்வு பிரிவினர் என்று தெரிவித்துள்ளனர்.சம்பவம் நடந்த பகுதியில் தான் அங்கஜனின் அலுவலகம் இருக்கிறது அங்கிருந்து வந்தவர்கள் தான் புலி கொடியை எடுத்து வந்தார்கள் என்று சொல்கிரார்கள் .
(3ம்    இணைப்பு)
அங்கஜனின் ஆட்களே இதனை செய்துள்ளனர். புலிகளோடு இணைந்து ஐ.தே.கட்சியினர் மேதினத்தை கொண்டாடுகிறார்கள் என தென்பகுதியில் பிரச்சரம் செய்யப்பட்டு வந்த நிலையில்,  திட்டமிட்டு இந்த நடவடிக்கையில் அரசும் அதன் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டுள்ளது.
புலிக் கொடியை தாங்கி ஓடிச் சென்ற வேளை அரச புலனாய்வுப் பிரிவினரே புகைப்படமும் எடுத்தனர். இவர்கள் அனைவரும் சாம்பல் நிறமான சேட் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாம் முதல் பிரசுரித்த செய்தி திருத்தம்.

No comments:

Post a Comment