கொழும்பு, ஏப். 30: மத்திய இலங்கையில் "தம்புள்ள' என்ற இடத்தில் இருக்கும் மஸ்ஜித் உல் கைரா எனும் மசூதியை இடம் மாற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி.) ஒப்புக்கொள்ளாது என அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ராஜபட்சவை சந்தித்தார் ஹக்கீம். அப்போது தம்புள்ள புத்த விகாரையின் பெüத்தத் துறவிகளும் பெüத்த கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் கூறுவதுபோல், அப்பகுதியில் "புனித இடம்' என எதுவும் ஒதுக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.
ஒருவேளை அந்தப் பகுதி பெüத்தர்களுக்கான புனிதப் பகுதியாகவே இருந்தாலும்கூட, அங்கு ஒரு மசூதியோ அல்லது கோவிலோ இருக்க என்ன ஆடேசபம் இருக்க முடியும்? புத்த விகாரைக்கு அருகே ஒரு மது பான விடுதியோ அல்லது சூதாட்ட விடுதியோ இருந்து - அதற்கு எதிர்ப்பு இருக்குமெனில், அந்த எதிர்ப்பை புரிந்துகொள்ள முடியும். ஆனால், மசூதியோ அல்லது கோவிலோ இருப்பதில் என்ன தவறு உள்ளது? என்று ராஜபட்சவிடன் கேள்வி எழுப்பினார் ஹக்கீம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக ஹக்கீமிடம் ராஜபட்ச தெரிவித்தார். இப்போதுள்ள சர்ச்சைக்குரிய மசூதி சட்டபூர்வமாகவும் தேவையான ஆவணங்களுடனும் இருப்பதால், அதிபர் என்ன முடிவெடுத்தாலும் மசூதியை இடம் மாற்றும் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸýம் இஸ்லாமியர்களும் ஏற்க மாட்டார்கள் என்றார் ஹக்கீம்.
பிரதமருக்கு பதில்: மற்றோர் இடத்தில் மசூதியை கட்டிக்கொள்ள இலவசமாக இடம் தருவதாக இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்னே கூறியிருப்பதற்கு பதிலளித்த ஹக்கீம், பணம் கொடுத்து மசூதிக்கு இடம் வாங்கும் அளவுக்கு முஸ்லிம்கள் பணக்காரர்கள்தான். எனவே, இலவச அரசு இடங்களைப் பெற நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment