Translate

Tuesday, 1 May 2012

மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் இனி பிரிட்டன் வரமுடியாது – திட்டவட்டாமாக அறிவிப்பு.


பிரிட்டனிற்கு இனிமேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் வரமுடியாதவாறு அமைச்சர்களுக்கு சட்ட அதிகாரம் வழங்கபப்ட்டுள்ளது. சித்திவதை, கொலை உட்பட பாரதூரமான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத பிரஜைகள் பிரிட்டனுக்கு வருகை தருவதைத் தடுப்பதற்குத் தேவைப்படும் கடுமையான குடிவரவு ஏற்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனித உரிமைகள் அறிக்கையிலுள்ள நடவடிக்கைகளை அந்நந்டடு வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை (இன்று) நடைமுறைப்படுத்துவதை ஆரம்பிக்கவுள்ளதாக “த கார்டியன்’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

கடந்த கால அல்லது நிகழ்கால மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான நம்பகரமான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டோர் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு மறுப்பதற்கு இந்த ஏற்பாடுகள் இடமளிக்கும்.

மனித உரிமைத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அதிகாரிகள் யாவருக்குமே விசா வழங்காமல் மறுத்துவிடுவது என்பதை இந்தச் சட்ட ஏற்பாடுகள் கொண்டிருக்கவில்லை. தனிப்பட்டவர்கள் தொடர்பாக அமைச்சர்கள் தீர்மானிக்க முடியும். மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையின் ஓரங்கமாக இருப்பதாகக் கருதப்பட்டால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கும் அரச தலைவர்களும் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ள முடியும். இந்த மாற்றங்களை வெளிவிவகார அலுவலக அமைச்சர்களும் பிரதிப் பிரதமர் நிக்கிளெக்கும் முன்னெடுத்திருக்கின்றனர்.

தற்போது வருகைதருவதற்கு தடை செய்யப்பட்டோரின் பட்டியலை பிரிட்டன் கொண்டிருக்கவில்லை.ஒவ்வொருவரத விடயமும் அத பெறுமதியான தன்மையை அடிப்படையாகக் கொண்டே பரிசீலனைக்கு எடுக்கப்படுகிறது. தாங்கள் விரும்பினால் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க மறுத்த காலம் இருந்ததை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தனிப் நபர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் போது போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஏனெனில் சம்பந்தப்பட்டோரின் மனித உரிமை பதிவுகளின் அடிப்படையில் இலகுவாக அனுமதியை வழங்க மறுக்க முடியாத தன்மை இருந்து வந்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தவென கருதப்பட்டால் மாத்திரமே அனுமதி வழங்க மறுப்பது என்பதற்கு அமைவாக தற்போது புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

“குடிவரவு விதிமுறைகளில் கோரப்பட்டிருப்பதற்கு திருப்திகரமானதாக இருந்தால் மட்டுமே ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி யைச் சாராத வெளிநாட்டுப் பிரஜைகள் பரிட்டனுக்கு வர முடியும். தனிப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை மீறலை இழைத்திருப்பதாக சுயாதீனமானதம் நம்பகரமானதுமான ஆதாரமிருந்தால் அந்த நபர் பிரிட்டனின் பிரவேசிக்க அனுமதிக்கப் படமாட்டார் என்று புதிய ஒழுங்கு விதி கூறுகிறது.

“சித்திரவதை, கொலை அல்லது சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டிருந்தால் ஆசியா, ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா உட்பட உலகிலுள்ள செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் மிக்க ஆட்களுக்குக் கூட பிரிட்டனுக்கள் வர முடியாது. இந்த சித்திரவதை போன்ற விடயங்கள் பிரிட்டினில் இடம்பெற்றிருப்பதோ, இல்லையோ இங்கு விடயமல்ல’ என்று அதிகாரி ஒருவர் ஒவ் சேவருக்கு கூறியுள்ளார்.

http://thaaitamil.com/?p=17524 

No comments:

Post a Comment