Translate

Tuesday, 1 May 2012

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் இந்திய அரசு பெற்று தர வேண்டும் : பிரதமருக்கு தமிழக காங்கிரஸ் எம்பி.க்கள் கடிதம்

புதுடெல்லி : ‘இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிட்டு தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக காங்கிரஸ் எம்பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இலங்கைக்கு சமீபத்தில் சென்ற இந்திய எம்பி.க்கள் குழுவில் தமிழக காங்கிரசை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், மக்களவை எம்பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி,சித்தன், மாணிக்க தாகூர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இலங்கை சென்று திரும்பிய ஒரு வாரத்துக்குப் பிறகு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இவர்கள் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


இலங்கையின் அரசியல் சட்டப்பிரிவு 13ல் திருத்தம் செய்து, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இப்பிரச்னையில் இந்தியா தலையிட்டு, தமிழர்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இலங்கை தமிழர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த, அங்குள்ள தமிழர் கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள், இலங்கையில் விட்டு விட்டு வந்த தங்கள் சொத்துகளை மீண்டும் அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு சொந்தமான செழிப்பான நிலங்கள், மீன கிராமங்களை ‘பாதுகாப்பு மண்டலம்’ என்ற பெயரில் இலங்கை ராணுவம் கைப்பற்றி வைத்துள்ளது. இந்த இடங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை நடத்துவதற்காக தமிழக அரசுடன் கலந்து பேசி ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் எம்பி.க்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment