
இவர் இமெல்டா சுகுமாருக்கு சளைத்தவர் அல்ல என மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர் அமைச்சர் பஷில் ராசபக்சவுக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுபவர் என்று கூறப்படுகிறது. கடந்த பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அமைச்சர் பஷில் ராசபக்ச மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகத்திடமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யார் யாரை வேட்பாளராக நியமிக்க முடியும் என கேட்டிருந்தார். இவர் சிலரின் பெயர்களை சிபார்சு செய்து பஷில் ராசபக்சவுக்கு அனுப்பியிருந்தார். அந்த விபரப்பட்டியல் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் அறையில் உள்ள தொலைநகல் மூலம் அனுப்பபட்டது.
அது மட்டுமன்றி தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் பற்றிய அறிக்கை ஒன்றையும் சுந்தரம் அருமைநாயகம் அமைச்சர் பஷில் ராசபக்சவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.ஒரு நிர்வாக சேவை அதிகாரி என்ற நிலையிலிருந்து கீழ் இறங்கி வந்து அமைச்சர் பஷில் ராசபக்சவுக்கு கீழ் பணியாற்றும் சிற்றூழியர் போல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் செயற்பட்டார் என மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment