தமிழர் பகுதியில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தை அகற்ற இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று இடம்பெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சிங்கள இராணுவத்தினர் வடக்குக் கிழக்குப் பகுதி எங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் வசித்து வரும் தமிழ் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.அன்றாடப் பணிகளைக் கூட அவர்களால் செய்ய முடிவதில்லை என்று சுட்டிக் காட்டியதுடன்.
வெளிநாடு வாழ் தமிழருக்கு உதவுவதற்காக தனி அமைச்சகமொன்றை ஏற்படுத்த வேண்டும் இதற்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்
வெளிநாடுவாழ் மலையாள மக்களின் நலனுக்காக கேரளத்தில் தனி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல வெளிநாடுவாழ் தமிழருக்கு உதவ வெளிநாடு வாழ் தமிழர் விவகாரத்துறை என்ற பெயரில் புதிய அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
No comments:
Post a Comment