Translate

Wednesday, 2 May 2012

எதிர்க்கட்சிகள் கூட்டாக ஐந்து தீர்மானங்கள்


எதிர்க்கட்சிகள் கூட்டாக ஐந்து தீர்மானங்கள்
news
 யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வின்போது ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டு மே தினத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் தலைவர்கள் ஏக மனதாக இத் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். 


 
*சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான தீர்மானம் 
இலங்கை வரலாற்றில் ஒருபோதுமே நடைபெற்றிருக்காதவாறு வாழ்க்கைச் செலவு, பொருள்களின் விலை என்பன அதிகரித்துள்ளன. 
 
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து முழுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. பெருந்தோட்டத் துறைமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு துரித வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். 
 
விவசாயிகள், கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். தொழில் புரியும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் பொருட்டு அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவுக்கும் அன்றாடத் தேவைக்கு ஏற்பவும் 750 ரூபாவால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 சிறந்த மற்றும் தொலைநோக்குடைய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடியதான பொருளாதார பிண்னணி ஒன்றை ஊருவாக்க வேண்டும். 

*அரசியல் தீர்வுக்கான தீர்மானம்
இனங்களுக்கு மத்தியில் மீண்டும் சந்தேகமும், நம்பிக்கை இன்மையும், அமைதியின்மையும் உருவாகுவதற்கான வாய்ப்புக்களை ஒழித்து அரசு பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்துள்ளவாறு அனைத்து இன மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான, நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க வேண்டும். 
 
* அரசியல் பழிவாங்கல்களைத் தடுப்பதற்கான தீர்மானம்
பழிவாங்கல்களின்றி சுதந்திரமாக வாழக்கூடிய, ஜனநாயகமும் அடிப்படை உரிமைகளும் ஆட்சிபுரிகின்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்புமாறு அரசை வற்புறுத்துகிறோம். 
 
* புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான தீர்மானம்
உழைப்பை ஏற்றுமதி செய்கின்றநாடுகளுக்கிடையே பொதுச் சேவை நிபந்தனைகளை உருவாக்குமாறும், வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபடுகின்ற ஊழியர்களின் உரிமை மற்றும் சிறப்பு உரிமைகளை உறுதிசெய்கின்ற சர்வதேச தொழில் அமைப்பின் 189ஆம் இலக்க சமவாயத்துக்கு ஒப்புதல் அழிக்குமாறும் முன்மொழிகின்றோம். 
 
* மீளக் குடியமர்த்துவதற்கான தீர்மானம்
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி, காணிகளை இழந்த உரிமையாளர்களுக்கான காணி உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்து சிவில் நிர்வாகத்தை உறுதி செய்து அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிவாரணங்களையும் வழங்குமாறு அரசை வற்புறுத்துகிறோம்.

No comments:

Post a Comment