Translate

Friday 18 May 2012

அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை


அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை
 அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ், ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 
வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்புப் பேரவை, அமெரிக்க ஐக்கிய இராச்சிய வர்த்தகப் பிரதிநிதிகள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் , அமைச்சர் பீரிஸ் சந்திப்பு நடத்தியுள்ளார்.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
 
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் விசேட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தேசிய பாதுகாப்புப் பேரவையின் தென்ஆசிய பிராந்திய பணிப்பாளர் மிச்சல் நிவிபில் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவை அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, மீள் குடியேற்றறம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
 
இலங்கையில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment