Translate

Friday, 18 May 2012

குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் பொறுப்பேற்ற வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர்


news
வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர் இன்று தனது குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அரச அதிபர்கள் மாற்றத்தின்படி, காலி மாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள எம்.கே. பந்துல கரிச்சந்திர, இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் புதிய அரச அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.


அவரது இப் பதவியேற்பின் போது, அரசியல்வாதிகள் போன்று தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் பலரையும் அழைத்து வந்திருந்ததுடன், பெருமளவு புத்த பிக்குகளின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.


தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டத்தில் தமிழ் மொழி தெரியாத ஒருவரை நியமித்திருப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அவதானிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

வட மாகாணத்தை சிங்கள் மயமாக்கும் அரசினது ஒரு நடவடிக்கையாக, வடக்கில் பாரிய சிங்களக் குடியேற்றத்தையும், அதற்கு இசையும் பொருட்டு அரச அதிபர்களையும் அரசு நியமித்து வருகிறது. சில மாதங்களுக்கு முதல் மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அங்கு சிங்கள குடியேற்றங்களும், புத்த விகாரைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


அதேவேளை, யாழ். மாவட்டத்திற்கு புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அருமைநாயகம், ஜகாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், சிறிலங்கா பொருளாதார அமைச்சருமான பஷில் ராஜபக்‌ஷவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment