புதுடில்லி: இரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தின் தலைவரும் இந்தியருமான லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தின் முதல் செல்வந்தராக உள்ளார். சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிடும் வருடாந்த பட்டியலில் அவர் தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார். லக்ஷ்மி மிட்டலும் அவரது குடும்பமும் சேர்த்து ரூ.1 இலட்சத்து 8 ஆயிரத்து 659 இலட்சம் கோடிக்கு சொத்து மதிப்பு வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ மற்றும் கோபி சந்த் ஹிந்துஜா சகோதரர்கள் ரூ. 73,580 கோடி சொத்து மதிப்புடன் 4 ஆம் இடம் வகிக்கின்றனர்.
No comments:
Post a Comment