மதுரை, மே 14- சிவனடியார்கள் ஞாயிற்றுக் கிழமை (13.05.2012) மாலை 5 மணிக்கு மதுரை ஆதின மடத்தில் பூஜை செய்வதற்காக நுழைந்தபோது, நித்தியானந்தா ஆட்கள் தடுக்கவே இரு தரப்புக்கும் கைகலப்பானது.
இதை யடுத்து மடத்தில் கலவரம் செய்ததாக சிவனடியார்கள் 7 பேர் மீது மதுரை விளக்குத் தூண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை யடுத்து மடத்தில் கலவரம் செய்ததாக சிவனடியார்கள் 7 பேர் மீது மதுரை விளக்குத் தூண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேநேரம் சிவனடியார்கள் மீதும், காவல் துறையினர் மீதும் செருப்பு வீசிய நித்தியானந்தா ஆட்கள்மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததால், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையில் காவல்நிலை யத்தை முற்றுகையிட்டவர்கள், கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரியும், சிவனடியார்கள் மீது செருப்பு வீசிய வர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் குரல் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.
No comments:
Post a Comment