மலையகம் சிறீபாத கல்வியல் கல்லூரி மாணவர்கள், கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு அண்மையில் வடபகுதிக்கு வந்திருந்தனர். அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி
உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டதுடன் பல பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி அனுபவங்களை பெற்றனர்.
உட்பட வடக்கின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டதுடன் பல பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி அனுபவங்களை பெற்றனர்.
அதில் ஒரு கட்டமாக அவர்கள் த.தே.கூட்மைப்பு செயலகமான அறிவகத்திற்கும் வருகை தந்து, பா.உறுப்பினர் சிறீதரன் உட்பட அறிவகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து சென்றனர்.
இவர்களுடன் பா.உறுப்பினர் கலந்துரையாடியபோது, தமிழ் தேசியம் என்பது மலையக மக்களின் உரிமையுடன் கூடிய ஒன்று. பல்வேறு மலையக தலைவர்கள் வடக்கு தமிழ் தலைவர்களோடு மிக நெருங்கிய உறவை கடந்த காலங்களில் பேணிவந்துள்ளனர்.
இன்றும் அது தொடர்கிறது. கிளிநொச்சியில் மலையக உறவுகளின் உறவினர்கள் ஏராளம்பேர் வாழ்கின்றனர். அவர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில் இரத்தப்பிணைப்பாக மலையகம் தொட்டு வடக்கு கிழக்கு வரை தமிழர் என்ற உறவு பிணைப்பு தொடர்கிறது.
வடக்கு கிழக்கில் நடக்கின்ற போராட்டம் மலையக மக்களுக்கும் சேர்ந்ததாகவே அமையும். அதனால்தான் மலையகத்தின் புகழ்பூத்த தலைவர்கள் எம்மோடு பிணைப்புக் கொண்டுள்ளார்கள்
என தெரிவித்தார்.
என தெரிவித்தார்.
No comments:
Post a Comment