Translate

Sunday 3 June 2012

மன்மோகன்சிங் கொழும்பு வர தயாராக இல்லை! புதுடெல்லி


மன்மோகன்சிங் கொழும்பு வர தயாராக இல்லை! புதுடெல்லிஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்லத் தயாராக இல்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன. 

2009இல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.


இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2008ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். 

அதுவும் இருதரப்புப் பயணமாக அமையவில்லை. சார்க் மாநாட்டுக்காகவே அவர் இலங்கை சென்றார். கடந்த 2010 ஜுன் மாதம் புதுடெல்லிக்கு இருதரப்புப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இந்த அழைப்பு விடுத்து இரண்டு ஆண்டுகளாகியும், மன்மோகன்சிங் அதை ஏற்று கொழும்புக்கு செல்லவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது, இந்தியப் பிரதமர் எவ்வாறு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடமும், சுஸ்மா சுவராஜிடமும் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் வெறும் கடதாசியிலே உள்ளன. 

சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை இந்தியாவை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்த உடன்பாடு தயாராகி இரண்டு ஆண்டுகளாகியும் தூசிபடிந்த நிலையிலுள்ளது. இந்தியாவுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றியிருந்தால், கடந்த மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் 2555ஆவது பரிநிர்வாண நாளில் மன்மேகன்சிங் கொழும்பு சென்றிருப்பார் என அவ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment