சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு ரூ.12,700 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
இது சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 0.14% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கருப்பு பணத்திற்கு எதிராக அந்தந்த நாட்டு அரசுகள் கடும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக உட்பட பிரதான அரசியல் கட்சிகளும் சில சமூக அமைப்புகளும் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு நாடுகளிலும் நிலவிவருவதால் கடந்த 4 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு ரூ. 20 லட்சம் கோடி குறைந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 51 சதவீதம் குறைந்துள்ளது.
சுவிஸ் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்படி, 2011ம் ஆண்டு இறுதியில் வங்கிகளில் உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ. 302 லட்சம் கோடி. இதில் 51% வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment