Translate

Tuesday, 10 July 2012

சிறிலங்காவை அச்சுறுத்தும் புலத்தின் எழுச்சி – ஏற்றுக் கொள்ளும் மஹிந்த.

களத்தில் வீழ்ச்சி கண்டாலும் புலத்தில் எழுச்சி அடைந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறிலங்காவுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளதாக சமகால நகர்வுகள் மூலம் புலனாகிறது.இதனை முறியடிக்க சிறிலங்கா பல வியூகங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக சிறிலங்காவின் இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறை தியத்தலாவையில் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.


கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றும் போது,
இது ஆசியா எழுச்சி கொள்ளும் யுகமாகும்.

ஆசிய நாடுகளுடன் நட்புறவைப் பேணலும் வலுப்படுத்தலும் அவசியமானது.

மேற்கு நாடுகள் தற்போது ஆசியா நாடுகள் மீது கவனமும் அக்கறையும் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சகல நாடுகளுடனும் நட்புறவைப் வலுப்படுத்தலும் அயல் நாடுகளுடன் இருதரப்பு உறவைப் பேண வேண்டிய அவசியத்தையும் வலுயுறுத்தியிருந்தார்.

உலக நாடுகளில் வாழும் புகலிடத் தமிழர்கள் எமக்கெதிராக மேற்கொள்ளும் பிரச்சாரங்களை தூதுவர்களாகிய நீங்கள் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு சிறிலங்காவுக்கு எதிராக தவறான பிரசாரத்தைச் செய்வது சிறிலங்கா வெளியுறவுக் கொள்கை ரீதியிலான சவாலாக இருக்கிறது. இந்தச் சவாலை நமது தூதர்கள் முறியடிக்க வேண்டும்.

வெளிநாடுகளிலுள்ள சிறிலங்கா தூதுவர்கள் எப்போதும் தமது நாட்டுக்கு நன்மையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டும்.

தொலைசியில் உரையாடுவதும், கெமராக்களுக்குப் போஸ் கொடுப்பதும் மட்டும் தான் தமது கடமை என்று நினைனகக்கூடாது என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

http://thaaitamil.co...வை-அச்சுறுத்து/ 

No comments:

Post a Comment