யாழ். நீதவானின் உத்தரவை ஆட்சேபித்து யாழ். மேல் நீதிமன்றில் நாளை வழக்குத் தாக்கல்

நாளைய தினம் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அதற்கான ஆவணங்களை திரட்டியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment