Translate

Saturday 7 July 2012

தமிழர் தாயகத்தில் சிங்கள படைகளால் தொடரும் படுகொலைகளுக்கு தமிழர் நடுவம் டென்மார்க் கண்டனம்


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கே மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கணேசன் நிமலருபனின் படுகொலைக்கு தமிழர் நடுவம் டென்மார்க் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழர் நடுவம் டென்மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதேவேளை, தென்மராட்சியில் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தையான ஜெயராசாவின் படுகொலை, சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை டென்மார்க் அரசு மற்றும் ஜரோப்பிய பாராளுமன்றத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றோம்.
டென்மார்க்கில் செயற்படும் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்களுடனும் தொடச்சியான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
கறுப்பு யூலையின் 29ம் ஆண்டின் நிறைவை நாம் அண்மித்து வரும் இவ்வேளையில், சிறிலங்கா சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களும் படுகொலைகளும் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான தற்போதைய தாக்குதல்கள் ஆனது சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பின் ஒரு அத்தியாயமே என்பதை நாம் இடித்துரைத்து வருகின்றோம்.
தமிழ் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் நிமலருபனின் படுகொலையையும் நாம் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாகவே தெரிவித்திருந்தோம்.
அதனைத தொடர்ந்து டென்மார்க் வெளிவிவகார குழுவில் உறுப்பினராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலையை உடனடியாக டென்மார்க் வெளிநாட்டமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக எமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
கறுப்பு யூலை படுகொலையின் 29ம் ஆண்டின் நிறைவை ஒட்டி கறுப்பு யூலையின் ஆரம்ப நாளான யூலை மாதம் 23ம் நாள் டென்மார்க் தலைநகர் கொப்பன்காகன் நகரசபைதிடலில் கறுப்பு யூலை நினைவுகளை சுமந்த கண்காட்சியுடனான கவனயீர்ப்பை நடாத்த டென்மார்க் காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதிகளை பெற்று ஒழுங்குகளை தமிழர் நடுவம் டென்மார்க் மேற்கொண்டு வருகின்றோம்.

No comments:

Post a Comment